தேனீ வளர்ப்பு பற்றிய செயல்முறை விளக்கம்..விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த கல்லூரி மாணவிகள்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டாரம் தெப்பத்துப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் தேனீ வளர்ப்பு பற்றிய செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை துணை தோட்டக்கலை துறை அலுவலர் திரு.க.சிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் உள்ள ஆர்.வி.எஸ். பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் க.சிவ வைஷ்ணவி சி.ஸ்ரீநிதி சி.ஸ்வாதி கு.தமிழரசி செ.வர்ஷா ச.விஜிதா மாரி பெ.யாஸ்மின் கிராமப்புற தோட்டக்கலை பணி திட்டத்தின் வாயிலாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேனீ வளர்ப்பு பற்றிய விளக்கங்களை விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர். தேனீ வளர்ப்பில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர். உணவில் சேர்த்துக்
கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாக விளக்கமளித்தனர். பெரும்பாலான தெப்பத்துப்பட்டி கிராமத்து மக்கள் பங்குப்பெற்று பயன் அடைந்தனர். தமிழ்நாடு அரசு வழங்கக்கூடிய தேனீ வளர்ப்பு திட்டங்களைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர். ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியின் இணை பேராசிரியர் முனைவர் வா. புனிதவதி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வழி நடத்தினார்.