ஆற்காடு கைலாசநாதர் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாண வைபோக உற்சவம் கோலாகலம்!
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு செட்டித் தெரு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள அருள்தரும் கைலாசநாதர் அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண வைபோக உற்சவம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
முன்னதாக ஆற்காடு பாலாற்றங்கரை ஓரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து 101 தட்டு சீர்வரிசையுடன் மேள தாளங்கள் முழங்க சிவவாத்தியத்துடன் ஊர்வலமாக அருள்தரும் கைலாசநாதர் அருள்மிகு காமாட்சி அம்பாளுக்கு கொண்டுவரப்பட்டது.பின்னர் இதனை தொடர்ந்து அருள்தரும் கைலாசநாதர் அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியம் வாசிக்க மேல தாளங்கள் முழங்க திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சியாகவும் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷம் முழங்க அரும்பெரும் கைலாசநாதர் அருள்மிகு காமாட்சியம்மனை வழிபட்டனர்.திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது