குன்னூர் சிம்பூங்காவில் 3 நாட்கள் பழக்கண்காட்சி..தோட்டக்கலைத்துறை அறிவிப்பு!

Loading

குன்னூர் சிம்பூங்காவில் 65 பழக்காட்சி வருகின்ற 2025 மே மாதம் 23.05.2025 முதல் 25.05.2025 வரை 3 நாட்கள் சிம்பூங்காவில் நடைப்பெற உள்ளது. பழக்காட்சியினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத்தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தோட்டக்கலைத்துறை குன்னூர் வட்டாரம், தோட்டக்கலை உதவி இயக்குநுள் செல்வி.ம.விஜியலட்சுமி, அவர்கள் கூறுகையில் குன்னூர் சிம்பூங்காவில் 65 பழக்காட்சி வருகின்ற 2025 மே மாதம் 23.05.2025 முதல் 25.05.2025 வரை 3 நாட்கள் சிம்பூங்காவில் நடைப்பெற உள்ளது. பழக்காட்சியினை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறந்த பழத்தோட்டங்களுக்கு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பழக்காட்சி போட்டிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தோட்டக்கலை உதவி இயக்குநர் சிம்பூங்கா, குன்னூர் அலுவலகத்தில் 29.04.2025-ம் தேதி முதல் பதிவு ஒன்றுக்கு ரூ.75/- வீதம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் பகுதிகளில் உள்ள பழக்காட்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் முறையே அரசு தாவரவியல் பூங்கா உதகை, தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய இடங்களில் போட்டிக்கான விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த விண்ணப்பங்கள் மே மாதம் 10-ஆம் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மே-11-ஆம் தேதிக்குள் தோட்டக்கலை உதவிஇயக்குநர்சிம்பூங்காகுன்னூர்அலுவலகத்தில்சமர்ப்பிக்கப்படவேண்டும். சிறந்த பழதோட்டங்களுக்கான தேர்வு செய்யும் குழு 13.05.2025 முதல் 15.05.2025 வரை நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் சிம்பூங்கா குன்னூர் அலுவலகத்தை அணுகவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.தொலைபேசி எண்கள்0423-2231718, 0423-2230395.

0Shares