20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்!

Loading

.டாஸ்மாக் ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற டாஸ்மாக் ஊழியர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் திருவள்ளூர் கிழக்கு மேற்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் டாஸ்மாக் ஊழியர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட மருத்துவ கல்லூரி அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில சிறப்பு தலைவரும் சட்ட ஆலோசகருமான கு.பாரதி தலைமை தாங்கினார்.மாநில பொது செயலாளர் குமார் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில் 21 ஆண்டு காலமாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதி எண். 153 ஐ நிறைவேற்ற வேண்டும்,ESI மருத்துவ திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும்,இறந்த பணியாளர்களின் வாரிசுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்,பணி நிரந்தரம், காலமுறை ஊதியம்,பணியாளர்களுக்கான நிலையாணை,அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் முருகன்,மாநில பொருளாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares