வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம்.. இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு!
வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை புதுச்சேரி மாவட்டம் நடத்தும் வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நேற்று சுதேசி காட்டன் மில் அருகில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ரஹமதுல்லஹ் தலைமை தாங்கினார்,புதுச்சேரி மாவட்ட அணைத்து பள்ளிவாசல் நிவாக பெருமக்கள் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஷர்புதீன் முன்னிலை வகித்தனர், பிலால், கமரூஜ்ஜமான், முஹம்மது மூஸா,ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.
பாசிச பாரதிய ஜனதா கட்சி கொண்டுவந்த வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திமுக மாநில அமைப்பாளர் திருமிகு. இரா சிவா அவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. வெ. வைத்தியலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் திரு. வே. நாராயணசாமி, மக்தப் கமிட்டி திரு. எம். உமர் பாரூக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. அ.மு. சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. எஸ். ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் திரு. தேவ. பொழிலன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஜிகினி முஹம்மது அலி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் திரு. அப்துல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் திரு. எம். ராஜ் முஹம்மது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாநில தலைவர் திரு.ஜே. சம்சுதீன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். கோபால் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கூட்ட முடிவில் புதுச்சேரி ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் திரு. எஸ். முபாரக் அலி நன்றியுரை ஆற்றினார்.