வஉசி சந்தை ஸ்மாா்ட் சிட்டி விவகாரம்… வியாபாரிகள் சங்கம் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் சந்திப்பு!

Loading

தூத்துக்குடி ஐக்கிய வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் கோாிக்கை வைத்தனர்.

தூத்துக்குடி வஉசி சந்தை என்ற பெயாில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் மார்க்கெட் இயங்கி வருகிறது. ஏற்கனவே ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடித்து கட்டப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அப்போது வியாபாாிகளின் கோாிக்கையை ஏற்று அத்திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அதை இடித்து கட்ட இருப்பதாக வந்த தகவலையடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பொியசாமியை சந்தித்து ஐக்கிய வியாபாரிகள் சங்க தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் மரகதராஜ், துனைத்தலைவர்கள் பட்டுராஜா, சண்முகராஜ், துனைச்செயலாளர்கள் உத்திரபாண்டி, செல்வசேகர், கௌரவ ஆலோசகர்கள் துரைச்சாமி, ஜோசப், கதிரேசன், தணிக்கையாளர் முத்துபாலகிருஷ்ணன், ஆகியோா் அளித்த கோாிக்கை மனுவில் 180க்கும் மேற்பட்ட சிறு குறு வியாபாாிகள் இதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள் அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அனைத்து வியாபாாிகள் ஓட்டு மொத்தமாக வேறு இடத்தில் புதிதாக கட்ட வேண்டும் எங்கள் வியாபாாிகளும் வங்கி கடன் மற்றும் இதர வகை கடன்கள் மூலம் தொழில்செய்து வருகின்றன. அது பாதிக்காத வகையில் தாங்கள் வியாபாாிகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும். என்று கோாிக்கை வைத்துள்ளனா்.

இதனையடுத்து மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் எல்லோருடைய நலனும் முக்கியம் என்று கருதிதான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறாா். அவர் வழியில் நாங்களும் பணியாற்றுகிறோம், மற்றும் மாநகராட்சி அதிகாாிகள் உள்ளிட்டவர்களுடன் இனைந்து நல்ல முடிவை எடுப்போம் என்று கூறினாா்.

மேயாின் நேர்முக உதவியாளா் ரமேஷ், வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்களும் வியாபாரிகளும் உடனிருந்தனா்.

0Shares