வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.. அனைத்து கட்சி போராட்டம்!
மங்கலம்பேட்டையில் அனைத்து கட்சி சார்பில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைந்து அனைத்து கட்சி சார்பில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பபெற மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே. எம்.சரீப்M. A அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அவர்
கண்டன உரையில் மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களுடைய சொத்துக்களை அபகரிக்கவும் இஸ்லாமியர்களை மூன்றாம் தர மக்களாக ஆக்க பிஜேபி அரசு செயல்படுத்த நினைக்கிறது மதத்தின் பெயரால் மக்களை பிளந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆள நினைக்கிறது ஒரு பொழுதும் இப்படிப்பட்ட சட்டங்கள் இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள் கோவில் நிர்வாகத்தில் ஒரு இஸ்லாமியர்களை நிர்வாகியாக போட முடியுமா இஸ்லாமியர்களின் நிர்வாகத்தில் மாற்று மதத்தினர் போட்டால் அவர்களுக்கு இஸ்லாமியர்களின் சட்ட திட்டங்கள் எப்படி தெரியும் இது ஏற்கக் கூடிய சட்டம் இல்லை என்னை போல் ஒருவரை கோவில் நிர்வாகத்தில் நிர்வாகியாக மத்திய அரசு நியமனம் செய்வார்களா எனவும் இந்தியாவில் அதிகமான வக்ஃப் சொத்துக்களை பிஜேபி கண்களை உருட்டுகிறது ஆகையால் இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் இல்லை என்றால் இன்னொரு புரட்சி ஏற்படுத்த வழி வகுக்கும் எனவும் அவர் கண்டன உரையை நிகழ்த்தினார்.
இதில் இந்திய குடியரசு கட்சி பொதுச் செயலாளர் மங்காபிள்ளைவிடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர் ராஜ்குமார் SDPI கட்சிஆபிருத்தீன் இந்திய தேசிய லீக். அப்பாஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
மக்கள் நீதி மையம் கட்சி. மக்கள் அதிகாரம் ஆகிய கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெறவலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு மத்திய அரசை இச்சட்டத்தைஉடனடியாகதிரும்ப பெற வேண்டுமென கையில் பதாகைகள் ஏந்தி மத்திய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் தமிழகமக்கள் ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட தெற்கு செயலாளர் இக்பால் தலைமைதாங்கினார் வடக்கு மாவட்ட செயலாளர்ஷேக்நூர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார் தமிழக மக்கள்ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகராஜா கலந்து கொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார்இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.