சேலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா..கோழி,ஆடு பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்!

Loading

சேலம் மாவட்டம் அரசமரத்துக்கரட்டூர் அமானி கொண்டலாம்பட்டி வன்னியர் குல ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி மாதம் 11ஆம் தேதி முதல் பங்குனி 28ஆம் தேதி வரை 15 நாள் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.,

பங்குனி 27ஆம் வியாழக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு கூல் பானை படித்தல் 9-மணிக்கு 18-ஆண்டு விநாயகர் நண்பர்கள் குழு சார்பாக 2000 பேருக்கு அன்னதானம் நடைபெற்றது. பொங்கல் வைத்தல் ஆடு,கெடா கோழி வெட்டுதல் மாலை 6 மணிக்கு அழகு குத்துதல் அக்னி கரகம் பூங்கரகம் மாவிளக்கு எடுத்தல் அம்மன் புஷ்பரதத்தில் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா வருதல் வானவேடிக்கையுடன் மேளதாளத்துடன் ஊர் பொதுமக்கள் தரிசனம் செய்தனர் .

அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று கம்பம்பிடுங்குதல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் பங்குனி 29- சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இரண்டாம் ஆண்டு வெற்றி படைப்பாக சிவன் பாய்ஸ் நண்பர்கள் குழு சார்பாக ஆடவா கலை குழு நடன நிகழ்ச்சி நடைபெறும் இவ்விழாவில் தேவஸ்தான கமிட்டியார் அரச மரத்து கரட்டூர் தலைவர் ஜீவானந்தம், செயலாளர் சேகர், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் பாலவெங்கடேசன்,கோவிந்தராஜ், துணைச் செயலாளர்கள் ஜெயக்குமார் சித்தேஸ்வரன், பாபு (எ) பச்சமுத்து இணைச் செயலாளர்கள் செல்வம், கருப்பண்ணன்,மகாலிங்கம், ரகு பாலச்சந்தர்,மதி உறுப்பினர்கள் வெங்கடேஷ் ,சீனிவாசன், முத்துசாமி, பூபதி,முத்துசாமி,சுரேஷ், ராஜா, குணசேகரன், ரமேஷ்குமார், சதீஷ்குமார், கோவில் பூசாரிகள் சின்னு , செல்வம், பார்த்திபன்,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

0Shares