சேலம் முருகன் வள்ளி தெய்வானை கோவில் பங்குனி உத்திர தேரோட்டம்..ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

Loading

சேலம்அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் வள்ளி தெய்வானை 13 ஆம் ஆண்டு பங்குனி உத்திர தேரோட்டம் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது !!!

சேலம் மாவட்டம் சேலம் மேற்கு வட்டம் பெருமாம்பட்டி கிராமம் வலியன்காடு வெற்றிவேல் நகரில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகர் வள்ளி தெய்வானை 13 ஆம் ஆண்டு வருட தேரோட்டம் பங்குனி உத்திரம் திருவிழா 10-7-2025 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை செய்யப்பட்டு அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் கோவில் வெற்றி வேல் நகர் வலியன்காடு இங்கிருந்து தேர் காலை 6-00 மணிக்கு புறப்பட்டு ஊர்வலமாக ஆன்மீக பக்தர்கள் தேர் வடம் பிடித்து மாலை 4 -00 மணிக்கு கோவிலுக்கு வந்து அரோகரா அரோகரா என்று தோஷம்மிட்டு ஆன்மீக பக்தர்கள் பொதுமக்கள் தரிசனம் செய்தனர் .

பங்குனி மாதம் 28 நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 7:00 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் வள்ளி தெய்வானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மிகச் சிறப்பான அன்னதானம் நடைபெற்று இரவு 8- மணிக்கு தெருக்கூத்து நாடகம் நடைப்பெற்றது பின்பு அனைவருக்கும் நீர் மோர் கம்மங்கூழ் அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் கோவில் பூசாரி பழனிவேல் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

0Shares