சேலம் செல்லியம்மன் திருவிழா கொண்டாட்டம்..,பூங்கரகம் எடுத்து வழிபட்ட மக்கள்!
சேலம் மாவட்டம் இரும்பாலை புது மாரியம்மன் கோவில் தெரு ஸ்ரீ புது மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் திருவிழா பங்குனி மாதம் 29 ஆம் நாள் 10-4-2025 வியாழக்கிழமை ஸ்ரீ புது மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் திருவிழாவை முன்னிட்டு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு 10 மணிக்கு சேத்துமுட்டி எடுத்தல் பொங்கல் வைத்தல் மாவிளக்கு பூஜை அழகு குத்துதல் ஆடு, கோழி,கெடா வெட்டுதல் அக்னி கரகம்,பூங்கரகம்,எடுத்து கோயில் சுற்றி அம்மனை வழிபட்டனர் .
வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று இரவு 10 மணிக்கு தெருக்கூத்து நாடகம் நடைபெறும் இவ்விழாவில்கோவில் தர்மகர்த்தா சஞ்சீவிராயன் கலைவாணி மன்ற பொருளாளர் சீனிவாசன். கோவில் பூசாரி வேடியப்பன், கோவில் நிர்வாகிகள் சுப்பிரமணி,மணி (எ) கிருஷ்ணன் சின்ன குழந்தை ஜெகதீசன்,மணி, பட்டக்காரர் வேலு,மற்றும் கோவில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் அனைவருக்கும் நீர் மோர்,அன்னதானம் வழங்கப்பட்டது.