புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை அடைக்க வேண்டும்..கிறிஸ்தவர்கள் போராட்டம்!
தூத்துக்குடி அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணி குழு சார்பாக ஏப்ரல் 18 புனித வெள்ளி கிழமையை முன்னிட்டு ஒரு நாள் மதுக்கடைகளை அடைக்க கோரி மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் தூத்துக்குடி சின்ன கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
போராட்டத்தில் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி முன்னாள் ஆயர் யுவான் அம்ப்ரோஸ் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தூத்துக்குடி மறைமாவட்ட செயலாளர் ஆண்டனி ஜெகதீசன் பொருளாளர் பேரரர் திரு பிரதீப் சி இ எஃப் ஐ பேராயம் இந்தியா தேசிய பொதுச்செயலாளர் ஆயர் ஸ்டீபன் அவர்கள் அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமை இயக்க 6 திரு ஜெயராஜ் அவர்கள் பெந்தேகோஸ் சபைகளின் மாமன்ற தலைவர் ஆயர் ஜஸ்டஸ் அவர்கள் பெந்தேகோ சபைகளின் கூட்டமைப்பு அருட்திரு சாம் செல்வராஜ் சி இ எஃப் ஐ பேராயும் தமிழ்நாடு ஆயர் சாமுவேல் மோசஸ் முன்னாள் தாளாளர் பிஷப் கார் கல்லூரி எபினேசர் மங்கள்ராஜ் அவர்கள் மறைமாவட்ட முதன்மை குருக்கள் மேப்பு பணி பேரவை அனைத்து பக்த சபைகள் தூத்துக்குடி அனைத்து விசைப்படகளின் உரிமையாளர் சங்கம் கிறிஸ்தவ சமூகப் பணி இயக்கம் முன்னாள் அமைச்சர் சீனா தானா செல்ல பாண்டியன் முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்கினர் தமிழக வெற்றிக்கழக திருச்செந்தூர் பொறுப்பாளர் வழக்கறிஞர் ரைட்டர் தேர் மாறன் கல்லறை மீட்பு குழு நிர்வாகிகள் இன்னாசி ஆரோக்கியசாமி விஜயகுமார் தூத்துக்குடி அன்னை பரதநல சங்க தலைவர் சேவியர்வாஸ் மற்றும் பங்கு தந்தையர் அருட் சகோதரிகள் மற்றும் இந்து சமய நண்பர்கள் இஸ்லாமிய சகோதரர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணி குழு செயலர் அருட்தந்தை ஜெயந்தன் சிறப்பாக செய்திருந்தார்.