பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

Loading

வாலாஜா அடுத்து தென்னிந்தியாளத்தில் புரட்சியாளர் டாக்டர் பூவை. மூர்த்தியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் தென்னிந்தியாளம் கிளை சார்பாக புரட்சியாளர் டாக்டர் .பூவை. மூர்த்தியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் துணைச் செயலாளர் புரட்சி பாரதக் கட்சி ராஜா தலைமை தாங்கினார். புரட்சி பாரத கட்சி நிர்வாகிகள் சரவணன், கிளைத்தலைவர் வினோத், கிளைச் செயலாளர் சத்தியமூர்த்தி, கிளை பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதனைத் தொடர்ந்து புரட்சியாளர் டாக்டர் பூவையார் அவர்கள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares