அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது..ஆதவ் அர்ஜுனா!
பொதுவாக விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று 40வது இளைஞர் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவரும், த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுசெயலாளருமான ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிவுடன் இணைந்து கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பொதுவாக விளையாட்டில் அரசியல் இருக்கக்கூடாது. அரசியலை விளையாட்டாக பார்க்கக்கூடாது
* புதுச்சேரி முதலமைச்சர் மிகவும் எளிமையாக இருக்கிறார். பொதுவாக விளையாட்டு வீரர்கள் அரசியலில் வெற்றி பெறுவார்கள். உதாரணமாக, அமெரிக்காவில் பராக் ஒபாமா கூடைப்பந்து வீரர். அவர் தினமும் தன்னுடைய விளையாட்டை விளையாடுவார்.
* நிர்வாகத்தில் எளிமையாகவும், எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருக்கக்கூடிய தலைவராக சிறு வயதில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சி.
* த.வெ.க. பற்றிய கேள்விக்கு no அரசியல் என்று கூறினார்.