பழைய ஓய்வூதிய திட்டம் த்தை அமல்படுத்திட வேண்டும் ..போட்டோ ஜியோ அமைப்பு போராட்டம்!

Loading

போட்டோ ஜியோ சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் முதல் சரண் விடுப்பை அமுல்படுத்திட ஆணை வழங்கிட வேண்டும்தேர்தல் வாக்குறுதி படி சத்துணவு, அங்கன்வாடி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஊழியர்கள் உட்பட மதிப்பூதியம் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். அரசுத் துறையில் புற ஆதார முறையை முற்றிலும் கைவிட்டு அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் கணேசன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் கூட்டமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

முதிர்ந்த வயதில் ஓய்வூதிய பாதுகாப்பு எதிர்கால தலைமுறை, இளைஞர்களின் வேலைவாய்ப்பு உட்பட தொலைநோக்கு பார்வையுடன் செயல்படும் இந்த போட்டோ ஜியோ அமைப்பிற்கு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவித்தனர்.

0Shares