புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்!
கலெக்டரின் அதிகாரபூர்வ மெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.இன்று காலை வழக்கம் போல் 8.45 மணி அளவில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிகளதொடங்கினர். இந்த நிலையில் கலெக்டரின் அதிகாரபூர்வ மெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது. பொதுமக்கள் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுமார் 1 ½ மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடிய விவகாரத்தில் முறையான நடவடிக்கை இல்லாததை கண்டித்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.