முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கைது!
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அனந்தராமன் தலைமையில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
சிபாரிசுக்காக அரியாங்குப்பம் காவல் நிலையம் சென்ற ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசனை அரியாங்குப்பம் காவல்துறை ஆய்வாளர் கலைச்செல்வன் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு MLC போடப்பட்டது மீது அதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் கலைச்செல்வன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் முன்பாக வரும் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது அமுதரசன் அவர்களுக்கு நியாயம் கிடைத்திடா இப்படிப்பட்ட மனித உரிமை மீறலை கண்டித்து அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் மீது கிரிமினல் மட்டும் துரை ரீதியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.அப்போது காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் அனந்தராமன் தலைமையில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
இந்த போராட்டத்தில் சமூக ஆர்வலர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள் அனைத்து சமூக போராளிகள் கலந்து கொண்டனர்.