ஆற்காடு பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்.. புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைக்க திட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் நடந்த பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்தவும், புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். நகர தலைவர் சஞ்சீவிராயன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நல்லூர் சண்முகம், பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் பொன்மலை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மே மாதம் 11ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்தவும், புதிய நிர்வாகிகளை கட்சியில் இணைக்கவும் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட வன்னியர் சங்கம் தலைவர் லட்சுமணன், நகர வன்னியர் சங்கம் செயலாளர் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் சுரேந்தர், முன்னாள் மாவட்ட பொருளாளர் அமுதா சிவா, முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலாளர் திருமுருகன், முன்னாள் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பழனி, முன்னாள் நகர செயலாளர்கள் ஏவிடி. பாலா, கணேஷ், நகர இளைஞரணி சங்கத் தலைவர் ராம்ராஜ், பசுமைத்தாயகம் பாஸ்கரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.