வேலூரில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.. மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கிய மாவட்ட ஆட்சித் தலைவர்!
வேலூர் மாவட்டம்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
வேலூர் மாவட்டம்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வேலூர் ஊரிசுக்கல்லூரி டிபோர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி வே. இரா. சுப்புலெட்சுமி, கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் எஸ்.ஆர்.என். மதுச் செழியன், உதவி இயக்குனர் திறன் மேம்பாடு திருமதி காயத்ரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.