நந்தியாலம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.. கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு!

Loading

உலக தண்ணீர் தினம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்த கிராம சபை கூட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சியில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் ஆற்காடு அடுத்த நந்தியாலம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் தேர்வு செய்தல் குறித்த கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நந்தியாலம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி பூபாலன் தலைமை தாங்கினார். இதில் தண்ணீரை சேமிப்பது, கலைஞர் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சத்யபிரியா சத்யமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதிசிவக்குமார், ராஜ்குமார், ஆறுமுகம், மகேஸ்வரிரவி, துரை, ஜரினா அப்துல்அகீம், தனலட்சுமிமணி, அமுதாரவிஸ், ஜெகன்நாதன், ஜெயந்தி செந்தில்குமார், ஷமீம்நாஷீர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

0Shares