அண்ணாகிராமம் ஒன்றியத்தில் தவெக சார்பில் தண்ணீர் நீர்மோர் பந்தல் திறப்பு!
பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட அண்ணாகிரமம் கிழக்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவை வழங்கப்பட்டன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உட்பட்ட அண்ணாகிரமம் கிழக்கு ஒன்றியம் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் நீர்மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் எம்.பிரேம்சந்தர், தலைமையில் நடைபெற்றது .
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க,கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அவர்களின் வழிகாட்டுதலின்படிகழக தலைமை நிலைய செயலாளர் எ.ராஜசேகர், அவர்களும்கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.ராஜ்குமார், ஆலோசனையில்அண்ணகிராமம் கிழக்கு ஒன்றியம் சார்பில் மேல்கவரப்பட்டுடில் தண்ணீர் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவை வழங்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் பொதுமக்கள் அனைவரும் வாங்கி அருந்தினர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆனந்த், நகர இணையச் செயலாளர் சதீஷ், நகர இளைஞரணி நிர்வாகி நவீன், அண்ணா கிராமம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், மேற்கு ஒன்றிய இணைச் செயலாளர் அசோக், கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
உடன் செல்வகுமார், சுபன்ராஜ், புஷ்பராஜ், மணிகண்டன், கவிதாசன், குமார், கிளை கழகநிர்வாகிகள்மூர்த்தி,கிருஷ்ணா,அகிலன்கிஷோர்,விஜய்,வாஞ்சிநாதன்,விக்னேஷ்,குரு,அரிபுத்திரி,ஹரிகரன், பெரியார்தாசன்,குரு,லட்சுமணன், தீபக்,இளைஞரணி நிர்வாகி அறிவு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.