2072 இஸ்லாமிய குடும்பத்திற்கு மளிகை தொகுப்பு.., சொந்த செலவில் வழங்கிய எம்.எல்.ஏ ஏ.பி.நந்த குமார்!
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி ஊசூர் கிராமத்தில் 2072 இஸ்லாமிய குடும்பத்திற்கு மளிகை தொகுப்பு எம்.எல்.ஏ ஏ.பி.நந்த குமார், சொந்த செலவில் வழங்கினர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் ஊசூர் கிராமத்தில் உட்பட்ட இஸ்லாமிய குடும்பத்திற்கு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமானஏ.பி.நந்த குமார், சொந்த செலவில் இருந்து நிதியிலிருந்து 2072 இஸ்லாமிய குடும்பத்திற்கு பிரியாணி தயாரிக்கும் பொருட்கள் மற்றும் கறி வாங்க 200 ரூபாய் வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, வேலூர் ஒன்றிய செயலாளர் C.L.ஞானசேகரன், அவைத்தலைவர் தா.பாபு, துணை செயலாளர் காசி, ஒன்றிய நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.