25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி!
25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு கணித, அறிவியல் பயிற்சி வழங்கப்பட்டது,
சிவகங்கை மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் அறிவியல் கணிதப் பாடங்களை சிறப்பாக நடத்துவதற்காக வானவில் மன்றம் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
மூன்றாவது ஆண்டான இந்த கல்வி ஆண்டில் 2024 – 25 இல் ஜுன் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை சிவகங்கை மாவட்டத்தில் 386 அரசு மேல்நிலை உயர்நிலை நடுநிலைப்பள்ளிகளில் கல்வி பயிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு 12 ஒன்றியங்களிலும் 17 வானவில் மன்றக் கருத்தாளர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் கணிதம் அறிவியல் பாடங்களில் ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டங்களும் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
வானவில் மன்றக் கருத்தாளர்களுக்கு சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூட்டரங்கில் மார்ச் மாத வேலை அறிக்கை சமர்பித்தல் மற்றும் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து வழிகாட்டுதலின்படி மாவட்ட உதவித் திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ கூட்டத்தைத் துவக்கி வைத்து கருத்தாளர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் முதன்மைக் கருத்தாளர் ஆரோக்கியசாமி விஞ்ஞான துளிர் புத்தங்களை வழங்கி பாராட்டி பேசினார். சிவகங்கை கிளைத் தலைவர் மணவாளன் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகாய பிரிட்டோவிடம் கருத்தாளர்கள் பயன்படுத்திய கையடக்க கணினி மற்றும் கருத்தாளர்களின் வேலை அறிக்கையின் நகல் சமர்ப்பிக்கப்பட்டது. இந்திய வளர்ச்சி இயக்கமாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாலா மூன்று வருடங்கள் சிறப்பாக பணியாற்றிய வானவில் மன்ற கருத்தாளர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் நன்றி தெரிவித்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் 3 வருட தங்களின் அனுபவ பகிர்வை பகிர்ந்து கொண்டார்கள்.