6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு தனது சொந்த செலவில் ரம்ஜான் தொகுப்பு வழங்கிய MLA!

Loading

வேலூரில் 6072இஸ்லாமிய குடும்பத்திற்கு ரம்ஜான் தொகுப்புகளை எம்எல்ஏ கார்த்திகேயன் தனது சொந்த செலவில் வழங்கினர்.

வேலூர் மாவட்டம் வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வேலூர் மாநகர செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ப.கார்த்திகேயன் தன் சொந்த செலவு நிதியிலிருந்து 6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு பிரியாணி தயாரிக்கும் பொருட்கள் மற்றும் 200 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்த குமார், கலந்து கொண்டு 6072 இஸ்லாமிய குடும்பத்திற்கு பிரியாணி தயாரிக்கும் பொருட்கள் மற்றும் 200 ரூபாய் வழங்கினார்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகராட்சி மேயர் திருமதி.சுஜாதா, 2வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர் முருகன், மற்றும் பகுதி கழக செயலாளர்கள் வட்ட கழக செயலாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.

0Shares