புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் ..தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை!
புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இன்று தமிழ்நாடு சிறுபான்மை அமைச்சர் மாண்புமிகு சா மு நாசர் அவர்களை சந்தித்து வருகின்ற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று கோரிக்கை மனு கொடுத்தோம் என தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தகவலை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதாக மாண்புமிகு அமைச்சர் அவர்கள் எங்களிடம் உறுதியளித்தார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்தோம், சமூக சேவகர் டாக்டர் தா அரசன் தாஸ் ‘மற்றும் திரு. சகாயம் திரு. சைமன் செல்வம் திரு ஜஸ்கர் கலந்து கொண்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்..