ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை!
ராணிப்பேட்டை வாரச்சந்தையில்,ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது, வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் இந்த சந்தையில், ரூ. 3 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை உலகம் முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்படஉள்ளது. நாளை மறுநாள் நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கால்நடை சந்தைகளில் ஆடு விற்பனை சூடுபிடித்துள்ளது.
சேலம் ,கள்ளக்குறிச்சி ,காஞ்சிபுரம் ,போன்ற மாவட்டங்களில் வாரச்சந்தையில் ழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக,அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை வாரச்சந்தை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படுகிறது, இங்கு வெள்ளிக்கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்தநிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமூகத்தினர் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச்சந்தையில் குவிந்தனர், இதனால் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பண்டிகையை முன்னிட்டு ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.