காவி உடை அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம் செய்த பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்!

Loading

பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொள்கை முடிவு எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன முறையில் காவி உடை அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது..

பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி & காரைக்கால் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழுதொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர். ஆனால் இதுநாள் வரை புதுவை அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

இந்தநிலையில் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொள்கை முடிவு எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று இந்திராகாந்தி சதுக்கம் அருகில் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நூதன முறையில் காவி உடை அணிந்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது..

இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்கள் தெய்வீகன் வினோத் சத்தியவதி மணிவண்ணன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பணி நீக்க ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

0Shares