கடலூரில் பிரம்மா குமரிகளின் சிவ ஜெயந்தி விழா.. கொடி ஏற்றத்துடன் துவக்கம்!
![]()
கடலூரில் பிரம்மா குமரிகளின் சிவ ஜெயந்தி விழா சிறப்பாக கொடி ஏற்றத்துடன் துவங்கியுள்ளது.
பிரம்மா குமரிகளின் போதனைகள், அனைத்து மதங்களுக்கும் அப்பாற்பட்டு, ஆன்மீக அனுபவத்திற்கு, நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறைக்கு வழிகாட்டுகின்றது. பிரம்மா குமாரிகள் ஆன்மீக மனமாற்றம் மற்றும் உலக சேவைக்காக, தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.
1936-லிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான மனிதர்கள் இந்த ஆன்மீக சேவையை உலகம் முழுவதும் செய்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் சிறு குழந்தைகளாக இருந்த பிரம்மா குமாரிகள், இப்பொழுது தங்களின் 90 மற்றும் 100 வயதில் அன்பு, அமைதி, ஆன்மீக ஞானம் நிறைந்த தாதிகளாக உலகிற்கு தனது மகத்தான சேவை செய்யும் கலங்கரை விளக்கங்களாக விளங்குகின்றார்கள்.

இப்படி கலங்கரை விளக்கங்களாக விளங்கும் பிரம்மா குமாரிகள் கடலூரில் சிவ ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடினர்.அப்போது சிவ ஜெயந்தி விழாவை கொடி ஏற்றத்துடன் துவங்கினர்.
இந்தநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரம்மா குமாரிகள் ஜான்சி ராணி சகோதரியுடன் கடலூர் மாவட்ட திரு.மேயர் சுந்தரி ராஜா அவர்கள் மற்றும் கடலூர் மாவட்ட பொருப்பு சகோதரர் முருகன் அவர்களுடன் வள்ளி விலாஸ் நகைக்கடை அதிபர் திரு சீனிவாசன் அவர்களும் மருத்துவர் பிரபாகரன்,வழக்கறிஞர் இ.கோபால் ஆபரன்,பேராசிரியர் bk.ரேவதி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

