குடும்பஸ்தன்’ நடிகையின் வீடியோ வைரல்!
‘குடும்பஸ்தன்’ படம் மூலம் பேன்ஸ் கவனத்தை ஈர்த்திருப்பவர் சான்வி மேக்னா
தமிழில் மணிகண்டன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியான படம் ‘குடும்பஸ்தன்’. இப்படத்தை சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்திருந்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘குடும்பஸ்தன்’ படம் மூலம் பேன்ஸ் கவனத்தை ஈர்த்த சான்வி மேக்னா தற்போது தெலுங்கில் ‘ரு ரு’ என்ற ஒரு ஏ.ஐ மியூசிக் வீடியோவில் நடித்திருக்கிறார்.
இந்த பாடலின், ஏ.ஐ காட்சிகளும், நடிகை சான்வியின் நடனமும் ரசிக்கும் படியாக உள்ளன. இது தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கும் நிலையில், அதனை இன்ஸ்டா ஸ்டோரியாக வைத்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் சான்வி.