ஒட்டன்சத்திரம் வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு…50க்கும் மேற்பட்ட பறவை வகைகள் கண்டுபிடிப்பு!

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  வனச்சரகத்தில் நடைபெற்றுவந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்  வனச்சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி வனச்சரக அலுவலர் த.ராஜா,வனவர் டி..இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.   பழனிமலை வடக்கு சரிவு,காப்புக்காடு மற்றும் ஒட்டன்சத்திரம் ஊரக பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பில் பனங்காடை, மயில், தேன்சிட்டு, தேன்பருந்து, மஞ்சள் வாலாட்டி, செந்தலைக்கிளி,அரசவால் ஈப்பிடிப்பான்,மாங்குயில் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பறவை வகைகளை பழனியாண்டவர் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், மற்றும் வனத்துறை பணியாளர்கள், உதவியுடன் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர்.இந்த கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றது.

0Shares