ஓடிபி இல்லாமலேயே புதிய மோசடி..பொதுமக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை!
ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் மோசடிக்காரர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தொழில்நுட்பம் போன்றவைகளை பயன்படுத்தி சமீபகாலமாக பொதுமக்களை மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.தொடர்ந்து நாளுக்கு நாள் பொதுமக்களை ஏமாற்றி வரும் சைபர் குற்றவாளிகள் தற்போது ஓடிபி இல்லாமலேயே வங்கி கணக்கை ஹேக் செய்து மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் அவர்கள் தற்போது ஈடுபட தொடங்கியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் போலீஸார் இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்கும்படி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.மேலும் நாம் பகிரும் மொபைல் எண்கள் மூலமாக தனிநபர்களின் விவரங்களை திருடும் இந்த சைபர் மோசடிக் கும்பல் அதனை பயன்படுத்தி சமீபத்தில் பொருட்கள் வாங்கியதாகவும், அதற்கு பரிசு கிடைத்துள்ளதகாவும கூறி செய்திகளை அனுப்புகின்றனர் அதனை நம்ப வேண்டாம் என பொதுமக்களுக்கு காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரி மாநிலத்தில் அதிகரித்துள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொதுமக்கள் தேவையற்ற லிங்கை தொட வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது ., அதன் படி சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை போலீசார் மக்களுக்கு நினைவு கூர்ந்துள்ளனர்.புதுடெல்லியைச் சேர்ந்த 26 வயது பெண் குரோமாவிலிருந்து அண்மையில் எச்பி லேப்டாப் வாங்கியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அடையாளம் தெரியாத நம்பரிலிருந்து பரிசு வென்றதாக வவுச்சர் ஒன்று வந்துள்ளது. அதில் குரோமா மற்றும் விஜய் சேல்ஸ் என்ற இரண்டு பெயர்களும் இடம்பெற்றுள்ளதை கண்டு சந்தேகமடைந்த அவர் அந்த லிங்கை தொடாமல் மோசடியிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.