புதிய மதுபான தொழிற்சாலைக்கு ஒப்புதல் அளித்தால் வழக்கு..முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி!
புதிய மதுபான தொழிற்சாலைக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுவையில் செய்தியாளருக்கு பேட்டியளித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மும்மொழி கொள்கையை புதுச்சேரியில் வரவிடாமல் தடுத்து நிறுத்தினோம்.என்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பிரதமருக்கு அடி பணிந்து மும்மொழி கல்வி கொள்கையை தற்போது அமல்படுத்தி மாணவர்கள் மற்றும் மக்கள் மீது ஹிந்தியை திணிக்கின்றனர்.
அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் கிடப்பில் போடுகிறார் முதலமைச்சர் ரங்கசாமி.தற்போது தாக்கல் செயப்பட்டுள்ள பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை, பட்ஜெட்டை பாராட்ட வேண்டாம்.ஊழல் ஆட்சி நடைபெறுகிறது.
புதுச்சேரியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.புதிய மதுபான தொழிற்சாலை வருவதற்கு காங்கிரஸ் விடாது, கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும்.புதிய மதுபான தொழிற்சாலைக்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அப்போது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.