IPL டிக்கெட் என கூறி ஆன்லைன் மூலம் மோசடி.. இணைய வழி குற்றப்பிரிவு காவல் துறை எச்சரிக்கை!
IPL டிக்கெட் என கூறி ஆன்லைன் மூலம் பணத்தை இழந்து இருந்தால் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 04132276144, 9589205246. என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் எச்சரிக்கை விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :வருகின்ற மார்ச் 22 முதல் நடைபெற உள்ள IPL கிரிக்கெட் தொடரின் சென்னை Vs மும்பை மற்ற அனைத்து IPL போட்டிகளுக்கான டிக்கெட் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுவதாகவும் அதற்கு அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யுமாறு கூறி இணைய வழி குற்றவாளிகள் உருவாக்கிய போலியான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இச்செய்தி முற்றிலும் பொய்யான செய்தி. இணையவழி குற்றவாளிகள் உங்களிடம் பணம் பறிப்பதற்காக மேற்கூறிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆகையால் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் மேலும் அவர்கள் அனுப்பும் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். தற்போது புதுச்சேரி இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இதுபோன்று பத்துக்கும் மேற்பட்டோர் ரூபாய் இரண்டு லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்துள்ளதாக புகார் வந்துள்ளன.
ஆகையால் இணைய வழி குற்றவாளிகள் அனுப்பும் அந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களுடைய மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு உங்களுடைய வங்கி தகவல்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு உங்களுடைய பணத்தை இழக்க நேரிடும் என்று இணைய வழி குற்றப்பிரிவு பிரிவு காவல் நிலையம் எச்சரிக்கை செய்கின்றனர்.
பொதுமக்கள் யாரேனும் இதன் மூலம் பணத்தை இழந்து இருந்தால் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 04132276144, 9589205246. என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் www.cybercrime.gov.in இணையதளம் மூலமாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.