மூன்றாம் மொழி இல்லை..இது எங்களது கொள்ளகை..அமைச்சர் ஆர் காந்தி பரபரப்பு பேச்சு!

Loading

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழி மட்டுமே தமிழகத்தில் போட்டி மொழியாக இருக்கும் நிலையில் மாணவ மாணவிகள் மூன்றாம் மொழி கற்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கூறினார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழி மட்டுமே தமிழகத்தில் போட்டி மொழியாக இருக்கும் நிலையில் மாணவ மாணவிகள் மூன்றாம் மொழி கற்க வேண்டும் என்று நினைத்தால் இந்தி மற்றும் பிற எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் இது எங்களது கொள்கை ஆனால் நீங்கள் கொண்டுவரும் கொள்கை என்ன ஏமாற்றுவதற்காக புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகின்றனர் என அமைச்சர் ஆர்,காந்தி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம்,மேல்விஷாம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது.

இப் போட்டியை தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ,மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,ஆர் காந்தி:தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குவது போல் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை அரசியலுக்காக சிலர் சும்மா பேசி வருகிறார்கள்,

மும்மொழி கல்வி குறித்து மத்திய கல்வி அமைச்சர் தமிழகத்திற்கு எதிராக பேசி வருவது குறித்து கண்டன கூட்டம் நடத்தி வருவதாகவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழி மட்டுமே தமிழகத்தில் போட்டி மொழியாக இருக்கும் நிலையில் மாணவ மாணவிகள் மூன்றாம் மொழி கற்க வேண்டும் என்று நினைத்தால் இந்தி மற்றும் பிற எந்த மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம் ,இது எங்களது கொள்கை, ஆனால் நீங்கள் கொண்டுவரும் கொள்கை என்ன ஏமாற்றுவதற்காக புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகின்றனர் என பேசினார்.

 

0Shares