புதுச்சேரி பட்ஜெட்..அதிமுக உரிமை மீட்பு குழு வரவேற்பு!
சேதராப்பட்டு மற்றும் கரசூர் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், AFT சுதேசி மெில்களில் நவீன தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஜவுளி பூங்கா அமைத்திட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர்அறிவித்திருப்பது நன்றியுடன் வரவேற்கத்தக்கது எனஅதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திருஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து ஆளுநர் உரை சம்பந்தமாக அதிமுக உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் திருஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:புதுவை மாநிலத்தில் இன்று மேதகு ஆளுநர் திருமிகு கைலாஷ் நாதன் அவர்கள் தனது உரயை சமர்ப்பித்துள்ளார்.திருமதி.தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணனை தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை தமிழில் வாசிக்கும் மூன்றாவது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அவர்கள் புதுவை மாநில மக்கள் நலன் கருத்தில் கொண்டு இந்த உரையை சமர்ப்பித்துள்ளார் என்று கூற வேண்டும்.
குறிப்பாக பாரம்பரிய நகர வளர்ச்சி திட்டத்திற்கு 45.29 கோடி ஒதுக்கீடுதிருக்கோயில் மேம்பாட்டிற்கு பிரசாத் திட்டத்தின் கீழ் 111.32 கோடி திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு.38 புதிய பேருந்துகள் வாங்க 17.30 கோடி ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்திட தேங்காய்திட்டு வருவாய் கிராமத்தில் 100 ஏக்கர் நிலம்மாசு இல்லாத பொது போக்குவரத்துக்கு 38 மின்னணு ரிக்ஷாக்கள். வரும் ஆண்டில் ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா
50 கோடி மதிப்பீட்டில் SC,ST குடியிருப்பு பகுதிகளை மேம்படுத்துவது ,விக்சிட் பாரத் -2047 திட்டத்தின் கீழ் சிறந்த புதுவை உருவாக்குதல்,பல்வேறு துறைகளின் அணுகுமுறைகளை மாற்றி நவீன தொழில் நுட்பம் மூலம் நீல பொருளாதாரம்.
பெஸ்ட் புதுவை திட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் கோரிக்கையை ஏற்றுசேதராப்பட்டு மற்றும் கரசூர் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள், எப்படி சுதேசி மெில்களில் நவீன தொழில்நுட்ப பூங்கா மற்றும் ஜவுளி பூங்கா அமைத்திட அறிவித்திருப்பது நன்றியுடன் வரவேற்கத்தக்கது.
தற்போது ஆண்டுக்கு 19 லட்சம் என்று உள்ள பயணிகள் வருகை 2047 க்குள் ஆண்டுக்கு 30 லட்சம் என்று மாற்றி பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.காரைக்காலில் 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் மருத்துவமனை போன்ற பல்வேறு மக்கள் திட்டங்கள் மூலமாக ஒரு சிறப்பான வரவு செலவு திட்ட அறிக்கைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமர்ப்பிக்க உள்ளது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டும் உரையாக ஆளுநர் அவர்களின் இன்றைய உரை அமைந்துள்ளது.