திருப்பதி மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்..பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். உலக பிரசித்தி பெற்ற இந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் நேரடியாக சாலை வழியாக கோயிலுக்கு செல்வது வழக்கம் . மேலும் சில பக்தர்கள் விரதம் இருந்து வேண்டுதலுக்காக நடை பயணமாக மலையேறி செல்வார்கள் .
அப்போது மலை ஏறும் போது சில சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது அடிக்கடி தெரிய வந்தது.சமீபகாலமாக திருப்பதி மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்த வனத்துறை பல்வேறு கடுப்பாடுகளையும் விதித்தது . சில சமயங்களில் பக்தர்களுக்கு சிறுத்தைகள் பல்வேறு தொந்தரவுகளையும் செய்தது மற்றும் பல்வேறு இடையூறுகளை கொடுத்ததை அனைவரும் அறிவர்.
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலைப்பாதையில் ஏழாவது மைல் அருகே திடீரென புகுந்த யானை கூட்டம் சாலை கடந்ததாகவும் இதனை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது, தகவல் அடிப்படையில் விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி அடித்தனர் .மேலும் வாகன ஓட்டுகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றும் மலைப்பாதை வழியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பத்தர்கள் செல்பி எடுக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.