EVM-ல் ஓட்டுக்களை திருட முடியும்…நிரூபிக்க தயார் என நந்தினி ஆனந்தன் விளக்கம்!
EVM- ஐ தடைசெய்துவிட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை வாக்குச்சீட்டில் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாக மக்களுக்காகப் போராடும் கட்சிஒருங்கிணைப்பாளர் நந்தினி ஆனந்தன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மக்களுக்காகப் போராடும் கட்சிஒருங்கிணைப்பாளர் நந்தினி ஆனந்தன் கூறுகையில்:EVM- ஐ தடைசெய்துவிட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை வாக்குச்சீட்டில் நடத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். EVM -ல் முறைகேடு செய்ய முடியும், ஓட்டுக்களை திருட முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தி வருகிறோம்.
மாதிரி EVM எந்திரத்தை தயார் செய்து அதன் மூலம் EVM மோசடியை ஆன் லைனில் Demo செய்து காட்டியுள்ளோம்.”EVM- ல் Software மூலம் ஓட்டுகளைத் திருட முடியும் என்பதை நேரடியாக செய்து காட்டி விளக்குகிறோம், இதற்கு நேரம் ஒதுக்கித் தாருங்கள்”. என மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட ஆட்சியர்களை நேரில் சந்தித்து மனு அளித்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக 10.03.2025 அன்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS அவர்களை சந்திக்க உள்ளோம்.
ஏற்கனவே தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாஹு மாற்றப்பட்டு கடந்த நவம்பர் 2024 முதல் அர்ச்சனா பட்நாயக் இப்பதவியில் உள்ளார். 2026 -ல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் இவர் தான் நடத்தவுள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை வாக்குச்சீட்டில் நடத்தக் கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் IAS அவர்களிடம் மனு அளிக்க உள்ளோம். மேலும் EVM மோசடியை செயல்முறை விளக்கமாக செய்துகாட்ட நேரம் ஒதுக்கித் தருமாறும் அவரிடம் வலியுறுத்த உள்ளோம் என மக்களுக்காகப் போராடும் கட்சிஒருங்கிணைப்பாளர் நந்தினி ஆனந்தன் கூறியுள்ளார்..