கும்பமேளாவில் 30 கோடி சம்பாதித்த படகோட்டி: யோகி ஆதித்யநாத் தகவல்!

Loading

உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த மகா கும்பமேளாவில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி பற்றிய தகவலை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டசபையில் பகிர்ந்து கொண்டார்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற கூடிய மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி உத்தர பிரதேசத்தில் தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்களாக சிறப்பாக நடைபெற்று முடிந்த நடந்த இந்த மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் எதிர்பார்த்ததற்கும் மேலாக 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடியுள்ளனர்

இந்நிலையில், உத்தர பிரதேச சட்டசபையில் பேசிய முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், 45 நாட்களில் படகோட்டி குடும்பம் ஒன்று ரூ.30 கோடி வருவாய் ஈட்டிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசும்போது, படகோட்டி ஒருவரின் குடும்பத்துக்கு 130 படகுகள் இருந்தன என்றும் அவற்றின் உதவியுடன் அந்த படகோட்டி, ரூ.30 கோடி வருவாய் ஈட்டியுள்ளார் என கூறினார் . , 45 நாட்களில் ஒவ்வொரு படகும் ரூ.23 லட்சம் அவருக்கு வருவாய் ஈட்டி தந்தது என்றும் நாளொன்றுக்கு ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.52 ஆயிரம் வரை வருவாய் கிடைத்துள்ளது என கூறினார்.

முன்னதாக உத்தர பிரதேச சட்டசபையில், 2025-26 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தாக்கல் செய்து பேசினார். இதில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு நலன் பயக்கும் வகையில் அவருடைய அரசின் கீழ் தாக்கல் செய்யப்படும் 9-வது பொது பட்ஜெட்டாகும்.

0Shares