மூளையின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி இருதய இயக்கத்தை மாற்றி சாதனை புரிந்த வேலூர் மருத்துவமனை!

Loading

வேலூர்:

வேலூர் நறுவீ மருத்துவமனை மூளையின் இரத்த ஓட்டத்தை நிறுத்தி இருதயத்தையும் இயக்கத்தை மாற்றி அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.இது நாட்டில் முதல் சாதனையாகும்.

வேலூர்மாவட்டம்,வேலூரில் நறுவீ தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் தலைவர் ஜிவி சம்பத் மற்றும் மருத்துவ குழுவினர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறுகையில்: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஆந்திர மாநில வருவாய்த்துறையில் பணியாற்றும் பணியாளர் முரளி (55) என்பவருக்கு திடீரென ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் நறுவீ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு மருத்துவ குழுவினர் பால் ஹென்றி,டாக்டர் பூபேஷ்,டாக்டர் சிவக்குமார்,விநாயக் சுக்லா உள்ளிட்ட மருத்துவர்கள் மூளையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அதே நேரத்தில் இருதயத்தையும் எக்கோ மூலம் அரைமணிநேரம் செயற்கையாக செயல்பட வைத்து மூளைக்கு ரத்த ஓட்ட்டம் செல்லாமல் தடுத்து மூளையில் உள்ள ரத்த கசிவு ஏற்பட்டு ரத்த குழாய் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு 8 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளி உயிர் பிழைத்தார்.

இந்த அறுவை சிகிச்சையின் போது மூளையின் சூட்டையும் தடுக்க உடல் தட்ப வெட்ப நிலையானது மாற்றியமைக்கப்பட்டது .இந்தியாவிலேயே இருதயத்தையும் நிறுத்தி மூளையில் ரத்த கசிவுக்கு அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட முரளி உயிழ் பிழைத்தார் .அவர் நலமுடன் மீண்டும் பணிக்கும் செல்கிறார். அவரும் மருத்துவ குழுவுக்கு நன்றி தெரிவித்தார் .நாட்டில் முதல் முதலாக மூளை ரத்த கசிவுக்கு இருதயத்தை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து இம்மருத்துவமனை நாட்டில் முதல்முறையாக சாதனை படைத்துள்ளது. இவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழக முதல்வரின் காப்பீட்டு திட்டம் பொருந்தவில்லை தமிழகத்தை செய்தவர்கள் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இந்த அறுவை சிகிச்சையை செய்துகொள்ளலாம் என கூறினார்கள்.

0Shares