இங்கிலாந்து நாட்டுக்கு போக ஆசையா? – இன்று முதல் சிறப்பு விசா விண்ணப்பம்!

Loading

இங்கிலாந்து நாட்டுக்கு பயணிக்க சிறப்பு விசாவுக்கு இன்று முதல் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம் என்று என்று சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதரக அதிகாரி ஹலிமா ஹோலண்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டு அரசு இந்தியா- லண்டன் இளம் தொழில் வல்லுநர்கள் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விசா வழங்கும் திட்டத்தை கடந்த 2023-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் இன்று செவ்வாய்க்கிழமை முதல் 20-ந்தேதி வரை சிறப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதரக அதிகாரி ஹலிமா ஹோலண்ட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-இந்த சிறப்பு விசா பெறும் பிற நாட்டினர் 2 ஆண்டுகள் வரை இங்கிலாந்து நாட்டில் வசிக்கலாம், படிக்கலாம், பயணிக்கலாம் மற்றும் வேலை பார்க்கலாம் என்றும் இந்த விசாவை பெறுவதற்கு gov.uk என்ற இணையளத்தில் இன்று முதல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த விசாவை பெறுவதற்கு வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் இங்கிலாந்து நாட்டில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் மேலும் வங்கி கணக்கில் 2,530 பவுண்ட் இந்திய நாட்டின் மதிப்பில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் பணம் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் இந்த விசா மூலம் இங்கிலாந்து நாட்டுக்கு வருகை தருபவர்கள் 2 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் கட்டாயம் திரும்பி விட வேண்டும் எனசென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதரக அதிகாரி ஹலிமா ஹோலண்ட் தெரிவித்துள்ளார்.

0Shares