சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 வாலிபர்கள் படுகொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!

Loading

மயிலாடுதுறை:

மயிலாடுதுறையில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 வாலிபர்கள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப் பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கொலை வழக்கில் சகோதரர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து கைதானவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதால், அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என எஸ்.பி. கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சாராய விற்பனை செய்ததை தடுத்ததால்தான் கொலை சம்பவம் நடைபெற்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

மேலும் இச்சம்பவத்தில் மேலும் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கில் நடந்து கொண்டார்கள் என்று தெரியவந்தால், அவர்கள் மீதும் கட்டாயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய எஸ்.பி. கோ.ஸ்டாலின் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.

0Shares