கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம்..உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு!

Loading

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

உலகில் அதிகமானோர் கூடும் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான கும்பமேளா விழா உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26-ந் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக பிரயாக்ராஜ் மாவட்டத்திலும், கும்பமேளா நடைபெறும் பகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயற்கை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்கப்படுகிறது. கும்பமேளாவில் நீராட விடுமுறை நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது.

மேலும் இந்த மகா கும்பமேளா நிகழ்வில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் ஒன்று கூடும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் துறவிகள், சாதுக்கள், ஆன்மிக தலைவர்கள் மற்றும் பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் வந்து செல்கிறார்கள்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் டெல்லியில் நேற்று இரவு பயங்கர கூட்ட நெரிசல் காணப்பட்டது.அப்போது உத்தர பிரதேசம் செல்லும் ரயிலில் ஏற ஒரே நேரத்தில் பயணிகள் முண்டியடித்துள்ளனர். அப்போது இதனால் நெரிசல் ஏற்பட்டு 3 குழந்தைகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது. அப்போது பலர் காயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலை இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் மட்ட விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தற்போது கூடுதலாக 4 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரெயில் நிலையத்தில் தற்போது கூட்டம் குறைந்து இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனனர்.

0Shares