பஞ்சாப் வந்தடைந்தது அமெரிக்க விமானம்:நாடு கடத்தப்பட்ட 119 இந்தியர்கள் வருகை!
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். முன்னதாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப்படுவர்ர்கள் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.அந்தவகையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் கடந்த வாரம் ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் அவர்கள் பிப்ரவரி 5-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இதில் அரியானா, குஜராத் மாநிலங்களைச் சேர்ந்த தலா 33 பேர், மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 30 பேர், மகாராஷ்டிரா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரைச் சேரந்த 2 பேர் என அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அப்போது அவர்களை கை மற்றும் காலில் விலங்கிட்டு விமானத்தில் அனுப்பி வைத்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்த நிலையில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையில் 2-வது கட்டமாக மேலும் 119 பேர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று நள்ளிரவு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
இவர்களில் 67 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களும் , 33 பேர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களும் , 8 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்களும் , 3 பேர் உத்தர பிரதேசத்தையும், தலா 2 பேர் மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் மாநிலத்தையும், தலா ஒருவர் என இமாச்சல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.மேலும் இன்று மற்றொரு விமானம் மூலம் மேலும் 157 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர்.