பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்.. முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.!

Loading

கடந்த 2023 2024ஆம் ஆண்டில் தையல் பயிற்சி முடித்த 33 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி பெறுபவர்களுக்கு தேவையான தையல் பொருட்கள் துறை மூலமாக வழங்கப்படுவதுடன் மாதந்தோறும் ரூ.1500/- உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2023 2024ஆம் ஆண்டில் தையல் பயிற்சி முடித்த 33 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழ்களை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

சபாநாயகர் செல்வம், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் உடனிருந்தனர்.

0Shares