நெருங்கக்கூட முடியாது..அண்ணாமலைக்கு சேகர்பாபு பதிலடி!
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்கக்கூட முடியாது என்றும் தி.மு.க.வை அழிக்க நினைத்தோர் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு என கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவாமல் விடமாட்டேன் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் விமர்சித்த நிலையில் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறுகையில்,தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் அறிவாலயத்தை நெருங்கக்கூட முடியாது என்றும் தி.மு.க.வை அழிக்க நினைத்தோர் மண்ணோடு மண்ணாக போனதுதான் வரலாறு என கூறினார்.
மேலும் அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.க.வின் கடைக்கோடி தொண்டர் கூட அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்வார் என்றும் ஆணவமாக பேசுவோருக்கு பதிலளிக்கும் வகையில் 2026 தேர்தலில் மக்கள் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைப்பர் என பேசினார்.
மேலும் தி.மு.க. தொண்டர்கள் கூட அரசியலை கரைத்து குடித்தவர்கள் என்றும் அண்ணாமலை போல் இறக்குமதி செய்யப்பட்டவர்களல்ல என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆவேசமாக கூறினார்.