தனது படத்தில் முத்தக் காட்சி ஏன்? இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்!

Loading

‘முதலில் நான் டிராகன் படத்தில் முத்தக்காட்சி வேண்டாம் என்றுதான் இயக்குனரிடம் கூறினேன் என்றும் ஆனால், படத்தின் கதைக்கு அது தேவைப்பட்டது’ என இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் விளக்கம்கொடுத்தார்.

தமிழ் சினிமாவில், ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் பிரதீப் ரங்கநாதன்.
இதையடுத்து ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார் . மேலும் இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

Why is there a kissing scene in his film? Director Pradeep Ranganathan

இந்தநிலையில் இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளநிலையில் நேற்று டிரெய்லர் வெளியானது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு பின் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது படத்தில் முத்தக் காட்சி ஏன்? என்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதீப் ரங்கநாதன் பதிலளித்து கூறுகையில்,
‘முதலில் நான் இந்த படத்தில் முத்தக்காட்சி வேண்டாம் என்றுதான் இயக்குனரிடம் கூறினேன் என்றும் ஆனால், படத்தின் கதைக்கு அது தேவைப்பட்டது’ என விளக்கம்கொடுத்தார்.

0Shares