சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை? ..அரசு மருத்துவர்கள் மீது நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு குற்றச்சாட்டு!

Loading

லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர் என்றும் காலை 8 மணிக்கு வர வேண்டியவர்கள் மதியம் 3 மணிக்குத்தான் வருகிறார்கள் என்றும் உயிருக்கு போராடும் நிலையில் ஏற்பட்டுள்ளது வேதனையை அளிக்கிறது” என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறினார்.

தமிழ் சினிமாவில் பிதாமகன் படத்தின் மூலம் ரசிகர்களால் அறியப்பட்டவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. அதை தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, பருத்திவீரன், தெனாவட்டு, நாடோடிகள் என பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் பெற்றவர்.

இந்த நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சென்னை போரூர் அரசு மருத்துவமனைக்கு கால் வலி காரணமாக சிகிச்சை பெற சென்றுள்ளார். அப்போது அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவரை நீண்ட நேரமாக காக்க வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே நேரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மூதாட்டி ஒருவரும் , நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவரும் அங்கு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிகிச்சை அழிக்க யாரும் இல்லாததால் ஆத்திரம்முற்ற கஞ்சா கருப்பு மருத்துவமனையில் உள்ள ஊழியர்களுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் சேர்ந்து அங்கிருந்த நோயாளிகளும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

மேலும் இதுகுறித்து நடிகர் கஞ்சா கருப்பு கூறியதாவது, “லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர் என்றும் காலை 8 மணிக்கு வர வேண்டியவர்கள் மதியம் 3 மணிக்குத்தான் வருகிறார்கள்என கூறினார். மேலும் உயிருக்கு போராடும் நிலையில் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு யாருமே இல்லை என்றும் இது வேதனையை அளிக்கிறது” என்று கூறினார்.

0Shares