சாய் பல்லவியை வச்சு ஓட்டிட்டா போதுமா? தண்டேல் விமர்சனம்..!
சாய்பல்லவி மற்றும் நாக சைதன்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தண்டேல். இப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் தேறுமா இல்லை என்பது குறித்த திரை விமர்சனம் இதோ. அமரன் திரைப்படத்தில் இறந்து போன கணவனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவரின் மனைவியாக சாய்பல்லவி நடித்த இடம் தான் இந்து ரபீக்கா வர்கீஸ். கிட்டத்தட்ட அதேபோன்று வேதத்தை தான் தண்டேல் திரைப்படத்திலும் ஏற்றிருக்கிறாதா.
மீனவ சமுதாயத்தில் வாழ்ந்து நண்பர்களாக தொடங்கி காதலராக மாறுகின்றனர் சாய்பல்லவி மற்றும் நாக சைதன்யா. காதலிக்காக தன்னுடைய தொழிலை மாற்றிக் கொள்ள நினைக்கும் நாகசைதன்யா கடைசி முறையாக மீன் பிடிக்க செல்லும்போது பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்கிறார். அவரை பாகிஸ்தான் சிறையில் இருந்து மீட்க காதலி சாய் பல்லவியின் போராட்டமே தண்டில் திரைப்படம். எப்போதும் போல தன்னுடைய நடிப்பில் சாய் பல்லவி தனி கவனம் கொடுத்து இருப்பதால் படத்திற்கு அது கூடுதல் பிளஸாக அமைந்திருக்கிறது.
ஆனால் சாய்பல்லவி அதிர்ஷ்டம் படத்திற்கு பலம் சேர்க்கும் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து அவருக்கு இது போன்ற கதாபாத்திரம் கொடுத்து படத்தை ஹிட் அடித்து விடலாம் என சில கூட்டம் நினைப்பது அபத்தமாகவே தோன்றுகிறது. அமரன் வெளியாகி நூறு நாட்களைக் கடக்காத நிலையில் இதில் சாய் பல்லவியை பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும். தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய வழக்கமான இசையால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
படத்தின் ஹீரோவான நாக சைதன்யா பல இடங்களில் ஒரே பிரச்சனை கொடுத்து போர் அடிக்க வைப்பது தான் உண்மை. ஹீரோ என கூறப்பட்டாலும் பாதி படத்தில் அவர் இல்லாமல் போவது படத்திற்கு பெரிய தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் சந்தோ முந்தட்டி வலுவான கதையை வைத்திருந்தாலும் அதை சரியான திரைக்கதையால் ரசிகர்களுக்கு கொடுக்காமல் தோல்வியடைந்து இருக்கிறார். படத்தின் முதல் பகுதி பல இடங்களில் அலுப்பை கொடுக்கிறது. பாகிஸ்தானில் நடப்பதாக கூறப்படும் சில காட்சிகள் கூடுதல் நாடகத் தன்மையோடு இருப்பதும் படத்தில் ரசிகர்களை ஒன்ற முடியாமல் செய்கிறது. கொஞ்சம் கா பெ ரண சிங்கம் கொஞ்சம் சீதாராமன் என கலந்து கொடுப்பது தண்டேல் எனச் சொல்லலாம்.