புதுச்சேரிக்கு 3432 கோடி ஒதுக்கீடு.. எல்.முருகன் பேட்டி!

Loading

3432 கோடி புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதுச்சேரி வருகை புரிந்த மத்திய அமைச்சர் எல்.முருகனை சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது 3432 கோடி புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

மேலும் 1450 கோடி ஜிப்மருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.186 கோடி புதுச்சேரியின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே ரயில்வே நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிக்கப்பட்டுள்ள திட்டம், அனைத்து மாநிலங்களுக்கான திட்டம்.தேவையான பட்ஜெட் புதுச்சேரிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை.தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது-மத்திய அமைச்சர் எல்.மூருகன் அப்போது கூறினார்.

இந்த பேட்டியின் போது சபாநாயகர் செல்வம் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

 

0Shares