டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி ..ஒட்டன்சத்திரம் பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!
![]()
ஒட்டன்சத்திரத்தில் டெல்லி சட்டப்பேரவையில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சி வெற்றியை இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் டெல்லி சட்டப்பேரவையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மாபெரும் வெற்றியை அடைந்ததை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் நகரக் கழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி ஒட்டன்சத்திரம் நகர தலைவர் குமாரதாஸ் தலைமையில் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சூர்யா முன்னிலை வகித்தார். இதல் வர்த்தகர்அணி தலைவர் வெங்கடேசன்,
இளைஞரணிநகரத் தலைவர் மணிமாறன் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

