50 இடங்களில் முன்னிலை..27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியை கைப்பற்றுகிறது பாஜக!
டெல்லி சட்டமன்ற தேர்தலில் துவக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் போட்டியிட்டார். இதில், துவக்கத்தில் கெஜ்ரிவால் பின்னடவை சந்தித்தார். பின்னர் பாஜகவின் பர்வேஷ் குமார் முன்னிலை பெற்றார். தற்போதைய நிலவரப்படி கெஜ்ரிவால் முன்னிலை பெற்று இருக்கிறார். எனினும் வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ளதால் கடும் போட்டி அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அதேபோல டெல்லியில் தற்போதைய முதல் மந்திரி ஆதிஷி , ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளார். கெஜ்ரிவாலே கடும் சவாலை சந்தித்து இருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் துவக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 19 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1 இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழல் உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினாலும் தலைநகர் டெல்லி மோடி, அமித்ஷா கூட்டணிக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கரம் கோர்க்கும் டெல்லிவாசிகள் சட்டமன்றத் தேர்தல்களில் கைவிட்டு வந்தனர். ஆனால் இம்முறை பாஜக பக்கம் தங்கள் பார்வையை டெல்லி மக்கள் திசை திருப்பி உள்ளனர்.